அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள் கூட்டமைப்பு ஊர்வலம்
அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள் கூட்டமைப்பு ஊர்வலம்
UPDATED : அக் 15, 2026 09:44 PM
ADDED : அக் 15, 2026 09:28 PM

புதுச்சேரி: புதுச்சேரி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் புதுச்சேரி அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உலக வெண்கோள் தினத்தை முன்னிட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நேற்று காலை இந்திரா சிக்னல் அருகில் துவங்கிய ஊர்வலம் சமூக நலத் துறை அலுவலகத்தில் முடிந்தது. மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் மாயவன் தலைமை தாங்கினார். புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணைய வழக்கறிஞர் புரட்சிக்குமார் ரோடின் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இந்தியன் பார்வையற்றோர் சங்க தலைவர் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாராக கலந்து கொண்டார்.
ஆந்திராவை போல், மாத உதவித் தொகையை பத்தாயிரம் வரை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும். பார்வையற்றோர்களுக்கு மொபைல்போன் வழங்குவதை அரசு திட்டமாக செயல்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து பயணப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
மணிகண்டன், சிவக்குமார், சுப்பராயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஜோசப் அந்தோணி நன்றி கூறினார்.
