தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வேளாண் மகளிர் தின விழா

வேளாண் மகளிர் தின விழா

வேளாண் மகளிர் தின விழா


UPDATED : அக் 15, 2026 09:33 PM

ADDED : அக் 15, 2026 09:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 09:33 PM ADDED : அக் 15, 2026 09:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் மத்திய அரசு திட்டமான ஆத்மா திட்டத்தின் மூலம் மகளிர் விவசாயிகள் தின விழா திருக்காஞ்சியில் நடந்தது.

விழாவிற்கு வேளாண் துறை அமைச்சர் ராஜசேகர் தலைமை தாங்கி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

வேளாண்துறை செயலர் ரவிபிரகாசம், வேளாண்மையில் மகளிரின் பங்கு குறித்து பேசினார். வேளாண்துறை இயக்குனர் ஜெய்சங்கர், புதுச்சேரி ஆத்மா திட்ட இயக்குனர் செழியன்பாபு, ஆத்மா துணை திட்ட இயக்குனர் சாந்தி ஆகியோர் பேசினர்.

விழாவில் பங்கேற்ற மகளிர்களுக்கு கோலம் மற்றும் உணவு பொருள் தயாரிப்பு போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

சாமுண்டீஸ்வரி, சேலம் வேளாண் உற்பத்தியாளர்கள் குழுவை சேர்ந்த சிவராணி, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் ரம்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வில்லியனுார் துணை வேளாண் இயக்குனர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை புதுச்சேரி ஆத்மா திட்ட அதிகாரிகள் செய்தனர். நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us