UPDATED : அக் 15, 2026 09:33 PM
ADDED : அக் 15, 2026 09:28 PM

வில்லியனுார்: வில்லியனுார் கிழக்கு மாட வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் சாலைகள் ‘பளீச்’ என்று உள்ளது.
வில்லியனூர் நான்கு மாட வீதியில், கழிவுநீர் வாய்க்கால் தாண்டி, ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். மேலும் நடைபாதை கடைகள், சாலையின் இரு புரங்களிலும் பைக்குகள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் மாட வீதியில் கடுமையான போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டு அவ்வப்போது வாகன விபத்துகளும் நடந்து வந்தது.
சப் கலெக்டர் குமரன் தலைமையில் வில்லியனுார் மாட வீதிகள் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற கொம்யூன் பஞ்சாயத்து, வருவாய் துறையினர், பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை, போலீசார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் நேற்று காலை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் ஆக்கிரமைப்புகளை அகற்றினர். இதனால் வில்லியனுார் கிழக்கு மாட வீதியில் சாலைகள் அகலமாகவும் ‘பளீச்’ என்று உள்ளது, இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
