/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்
/
அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 16, 2024 07:13 AM
புதுச்சேரி : புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில், பல்வேறு சங்கங்களுக்கு, ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாய மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்கள், மத்திய அரசு தொழிற் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி உள்ளது. இதற்கு ஆதரவாக புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் நேற்று ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அண்ணாசாலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் பிரேமதாசன், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். நடராஜன், சண்முகம் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.