நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சேதராப்பட்டில் வீட்டைவிட்டு வெளியே சென்ற பெண் மாயமானார்.
புதுச்சேரி அடுத்த சேதராப்பட்டு புதிய காலனி நாகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜன் மனைவி நர்மதா, 42. கடந்த 6ம் தேதி, வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும், அவர் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து, நர்மதாவை தேடி வருகின்றனர்.

