ADDED : மார் 20, 2024 11:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : காப்பகத்தில் இருந்து மாயமான மனநலம் பாதித்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர் ஷகிலா, 34; மனநலம் பாதித்தவர். புதுச்சேரி, ஜவகர் நகர் தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த இவர் கடந்த 29ம் தேதி அங்கிருந்து காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரை பற்றி தகவல் தெரிந்தால், 0413 - 2292284 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவும்.

