நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : தண்டல் கட்ட முடியாத விரக்தியில் கட்டட தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கருவடிக்குப்பம் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம், இவரது மனைவி கொடியரசி 50, கட்டட தொழிலாளி. இவர் அதே பகுதியியைச் சேரந்தவரிடம் ரூ. 4 லட்சம் தாண்டல் வாங்கியுள்ளார். இதனை அவரால் சரியாக கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 6 மணியளவில் வீட்டில் எதிரில் இருந்த பூவரசம் மரத்தில் தனது புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கணவர் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.