நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி, ரெட்டியார்பாளையம், விவேகானந்தா நகரை சேர்ந்தவர் வைஷ்ணவி, 36. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, தந்தையுடன் வசிக்கிறார். ஆசிரியர் பயிற்சி முடித்த வைஷ்ணவி, பள்ளி மாணவர்களுக்கு வீட்டிலேயே டியூஷன் எடுத்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் வெளியே சென்று, வீட்டிற்கு கோபமாக வந்த வைஷ்ணவி, நேராக அறைக்கு சென்றார்.வெகுநேரமாகியும் வைஷ்ணவி வெளியே வராததால், சந்தேகமடைந்த அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, அறையின் உள்ளே ஜன்னல் வழியாக பார்த்தபோது, புடவையால் துாக்குப் போட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.
அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு, டாக்டர் பரிசோதித்து வைஷ்ணவி இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.