நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார் : கரிக்கலாமம்பாக்கம் அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் துாக்குக்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கரிக்கலாம்பாக்கம் அடுத்த கோர்க்காடு ஏரிக்கரை வீதியை சேர்ந்தவர் மணி மனைவி மாரி, 43; கூலித் தொழிலாளி. இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல் நிலை மோசமானதால் மனமுடைந்த மாரி நேற்று முன்தினம் மாலை துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது மகள் சிவசக்தி கொடுத்த புகாரின் பேரில், மங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.