/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மருத்துவமனை தோட்டத்தில் உரமில்லா காய்கறி செடிகள் நடவு
/
அரசு மருத்துவமனை தோட்டத்தில் உரமில்லா காய்கறி செடிகள் நடவு
அரசு மருத்துவமனை தோட்டத்தில் உரமில்லா காய்கறி செடிகள் நடவு
அரசு மருத்துவமனை தோட்டத்தில் உரமில்லா காய்கறி செடிகள் நடவு
ADDED : ஜன 10, 2025 06:14 AM

புதுச்சேரி: ராஜிவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள விவசாய தோட்டத்தில், பூச்சிக்கொல்லி உரங்கள் பயன்படுத்தாத காய்கறி செடிகள் நடவு செய்யப்பட்டது.
இந்த மருத்துவமனை வளாகத்தின் பின்புறம் உள்ள, தோட்டத்தில், பூச்சிக் கொல்லி உரங்கள் பயன்படுத்தாமல் காய்கறி செடிகள் நடவு செய்து, கீரை விதைகளை விதைத்து, அவற்றை நோயாளிகளுக்கு சமைத்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, இயற்கையான விவசாய தோட்டத்தில், காய்கறி செடிகள் நடவு செய்து, கீரை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மருத்துவமனை கண்காணிப்பாளர் ஐயப்பன்,மக்கள் தொடர்பு அதிகாரி குருபிரசாத் வழிகாட்டுதலின்படி, டஸ்டர் நிறுவன ஊழியர்கள்செடிகளை நடவு செய்து,  விதைகளை விதைத்தனர்.
உரமில்லாமல், இயற்கையான, முறையில், விளையும் காய்கறிகளை சமைத்து, நோயாளிகளுக்கு வழங்கினால், நோயாளிகள் விரைவில், குணமடைவர் என, கண்காணிப்பாளர் தெரிவித்தார்.