தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சவுடாம்பிகை அம்மன் கோவிலில் பண்டிகை துவக்கம் 

சவுடாம்பிகை அம்மன் கோவிலில் பண்டிகை துவக்கம் 

சவுடாம்பிகை அம்மன் கோவிலில் பண்டிகை துவக்கம் 


ADDED : ஆக 27, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 08:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, லாஸ்பேட்டையில் வீரபத்திரசாமி, சவுடாம்பிகை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், அம்மன் பண்டிகை நேற்று காலை மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது.

மாலை பண்டாரி இடித்தல் நடந்தது. முக்கிய நிகழ்வாக, இன்று காலை 6:00 மணிக்கு கற்பக விநாயகர், வீரபத்திரர், சவுடாம்பிகை அம்மனுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.

தொடர்ந்து, காலை 8:00 மணிக்கு சக்தி அழைத்தல், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து அலகு போட்டு கொண்டு நகர்வலம் வருதல் நடக்கிறது.

பின், பகல் 12:00 மணிக்கு சவுடாம்பிகை அம்மன் அலகு பானையில், திரவுபதியம்மன் கோவிலில் இருந்து கங்கை நீர் கொண்டு வருதல், மதியம் 1:00 மணிக்கு சவுடாம்பிகை அம்மன் அலகுக்கு அபிஷேகம், 2:00 மணிக்கு ஜோதி மாவு கூட்டுதல், இரவு 7:00 மணிக்கு மகாஜோதி மற்றும் சுவாமி வீதியுலா,  இரவு 10:00 மணிக்கு அழுது படையல் நடக்கிறது. 

நாளை இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், மஞ்சள் நீராட்டு நடக்கிறது.  

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us