/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரவுடிகளுக்காக போராடுவதா? நாராயணசாமிக்கு சபாநாயகர் கண்டனம்
/
ரவுடிகளுக்காக போராடுவதா? நாராயணசாமிக்கு சபாநாயகர் கண்டனம்
ரவுடிகளுக்காக போராடுவதா? நாராயணசாமிக்கு சபாநாயகர் கண்டனம்
ரவுடிகளுக்காக போராடுவதா? நாராயணசாமிக்கு சபாநாயகர் கண்டனம்
ADDED : ஏப் 03, 2025 03:57 AM

புதுச்சேரி: ரவுடிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு, சபாநாயகர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
குற்றவாளிகளுக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்., கட்சியினர் நடத்திய மறியல் போராட்டத்தால், நோயாகளிகளை ஏற்றிச் சென்ற 3 ஆம்புலன்ஸ்கள் சிக்கிக் கொண்டன. பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சம்பவத்தின் உண்மையை அறியாமல், அவர் போராட்டம் நடத்தியுள்ளார். ரவுடி பட்டியலில் உள்ள ஆனந்த், பாலா, சம்பத் ஆகியோர் கடந்த 27ந் தேதி குடிபோதையில், சுற்றுலா பயணிகளை மிரட்டி தாக்கினர். விசாரணைக்கு சென்ற போலீசாரையும் மிரட்டினர். அதனைத் தொடர்ந்து மூவரையும், எஸ்.ஐ., தலைமையிலான போலீசார் பிடித்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
அங்கு வந்த ராஜிவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாநில தலைவர் அமுதரசன் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கியதோடு, இன்ஸ்பெக்டரை திட்டினார். இதற்கெல்லாம் வீடியோ ஆதாரம் உள்ளது.
போக்சோ, வழிப்பறி, திருட்டு வழக்கு குற்றவாளிகளுக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் , எம்.எல்.ஏ., மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம் நடத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன்.
ரெஸ்டோ பார்களால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக நாராயணசாமி கூறியுள்ளார். ரெஸ்டோ பார்களை ஆரம்பித்ததே காங்., கட்சிதான். முன்னாள் எம்.எல்.ஏ.,விற்கு 3 ரெஸ்டோ பார்களை எந்த விதமுறையையும் பின்பற்றாமல் வழங்கினார்கள்.
பொதுமக்களுக்கு இடையூறாக, அனுமதியின்றி போராட்டம் நடத்தியவர்கள் மீது ஜாமினில் வெளிவராத வகையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இதுதொடர்பாக கவர்னர், முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

