தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு


UPDATED : செப் 19, 2026 09:16 PM

ADDED : செப் 19, 2026 09:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 19, 2026 09:16 PM ADDED : செப் 19, 2026 09:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் நேற்று யாரும் வேட்பு மனுக்களை வாபஸ் பெறாததால், 11 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் அட்டவணை கடந்த 7ம் வெளியானது. தொடர்ந்து கடந்த 9ம் தேதி அரசிதழில் வெளியாகி அன்றே வேட்பு மனு தாக்கல் துவங்கியது. கடந்த 16ம் தேதி வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இதில், 14 வேட்பாளர்களிமிருந்து 15 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட வேட்புமனுக்கள் அனைத்தும் கடந்த 17ம் தேதி வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் முன்னிலையில், பரிசீலனை செய்யப்பட்டது.

இதில் மூன்று மாற்று வேட்பாளர்கள் மனுக்கள் மற்றும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்த நா.த.க., கார்த்திகுமாரியின் ஒரு மனு என மொத்தம் 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 11 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான நேற்று எந்த ஒரு வேட்பாளரும் மனுவை வாபஸ் பெறவில்லை. இதனை தொடர்ந்து வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின் இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்தல் நடத்தும் அதிகாரியால் வெளியிடப்பட்டது. அதன்படி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில், மொத்தம் 11 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us