ADDED : ஆக 10, 2025 08:36 AM

புதுச்சேரி : லண்டனில் நடைபெற உள்ள கயிறு இழுக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும், டி.என்.பாளையத்தை சேர்ந்த வீராங்கனைக்கு, பயண செலவிற்காக, ஒரு லட்சம் ரூபாய்க்கான, காசோலையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
இங்கிலாந்து, லண்டன் நகரில் வரும் செப்டம்பர் 4 முதல் 8ம் தேதி வரை கயிறு இழுக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. இதில், இந்திய அணி சார்பில் பங்கேற்க, மணவெளி தொகுதி டி.என்.பாளையம் கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமாரி தேர்வாகி உள்ளார்.
அவருக்கு பயண செலவிற்காக, சபாநாயகர் செல்வம், முதல்வர் நிவாரண நிதியின் மூலமாக நிதி உதவி பெற்று தர ஏற்பாடு செய்தார்.
அதன்படி, பயண செலவிற்காக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை, முதல் வர் ரங்கசாமி நேற்று சட்ட சபையில், வீராங்கனை ஜெயக்குமாரியிடம் வழங் கினார். சபாநாயகர் செல்வம் உடனிருந்தார்.