/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறுதி ஊர்வலத்தில் மாலைகளை சாலையில் வீசினால் அபராதம்
/
இறுதி ஊர்வலத்தில் மாலைகளை சாலையில் வீசினால் அபராதம்
இறுதி ஊர்வலத்தில் மாலைகளை சாலையில் வீசினால் அபராதம்
இறுதி ஊர்வலத்தில் மாலைகளை சாலையில் வீசினால் அபராதம்
ADDED : பிப் 04, 2025 05:51 AM
புதுச்சேரி: இறுதி ஊர்வலத்தின்போது சாலையில் மாலை, மலர்களை வீசினால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உழவர்கரை நகராட்சி எச்சரித்துள்ளது.
உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் செய்தி குறிப்பு: உழவர்கரை நகராட்சி பகுதிகளில், இறுதி ஊர்வலங்களின்போது சாலைகளில் மலர்கள், மாலைகள் வீசப்படுகின்றன.
சாலையில் வீசும் மாலைகள் மீது, இரு சக்கர வாகனம் ஏறி வழுக்கியதில் விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்களிடம் இருந்து நகராட்சிக்கு புகார்கள் வருகிறது.
மேலும் தகுந்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனால், பொதுமக்கள் உயிர் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, போலீசில் அடக்க உத்தரவு பெறும் போது , இறுதி ஊர்வலம் எந்த வழியாக செல்லும் என்ற விபரங்களை முன்னரே போலீஸ் நிலையத்தில் தெரிவித்து, இறந்தவரின் உடல் மீது போடும் மாலைகள், மலர் வளையங்களை சாலையில் போடாமல், இடுகாட்டில் நுழைவு பகுதி ஓரமாக வைத்து விட்டால், ஸ்வச்சதா ஊழியர்கள் மூலம் அகற்றப்படும்.
இதனை மீறி சாலைகளில் மலர்கள், மாலைகள், மலர் வளையங்கள் வீசினால், அபராதம் விதிக்கப்படுவதோடு, நகராட்சி சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

