ADDED : மே 26, 2025 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : இ.சி.ஆரில் அதிவேகமாக சென்ற பைக்கள், கார்களுக்கு போக்குவரத்து போலீசார் வஅபராதம் விதித்தனர்.
புதுச்சேரியில் இருந்து இ.சி.ஆர் வழியாக சென்னைக்கு செல்லும் பைக்குகள், கார்கள், வேன்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிவேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு இ.சி.ஆரில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த பைக்குகள், கார்களை லேசர்கன் மூலம் கண்காணித்து ரூ. 1000 அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும், வர்த்தக ரீதியான வாகனங்களுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.