பட்டாசு வெடித்து தீ விபத்து அரிசி குடோனின் பொருட்கள் சேதம்
பட்டாசு வெடித்து தீ விபத்து அரிசி குடோனின் பொருட்கள் சேதம்
ADDED : நவ 07, 2026 04:56 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் அரிசி குடோனில் சாக்கு பைகள் எரிந்து சேதமடைந்தன.
தவளக்குப்பம் மெயின் ரோட்டில் தனியார் பழைய அரிசி குடோன் உள்ளது. மூடியிந்த குடோனில் இருந்து இன்று (நவ.,7) காலை 10:30 மணியளவில் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் புதுச்சேரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில், கண்டெய்னரில் இருந்த சாக்கு பைகள், பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
பட்டாசு வெடித்த போது, தீ பிடித்து எரிந்தது தீயணைப்பு துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
