தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மின்கம்பம் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு

மின்கம்பம் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு

மின்கம்பம் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு


UPDATED : நவ 07, 2026 04:54 PM

ADDED : நவ 07, 2026 04:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 04:54 PM ADDED : நவ 07, 2026 04:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அம்பலத்தடையார் மடத்து வீதியில் மின் கம்பம் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரியில் மின் கம்பங்களில் இன்டர்நெட், கேபிள் டி.வி., உள்ளிட்ட பல்வேறு விதமான கேபிள்கள் அத்துமீறி கட்டப்பட்டுள்ளது. இந்த கேபிள் ஒயர்களால் அடிக்கடி மின்கம்பங்களில் பல்வேறு விதமான பிரச்னைகள் ஏற்பட்டு மின்துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.

இதையடுத்து, மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் ஒயர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என, மின்துறை எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும், மின் கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கேபிள் ஒயர்கள் அகற்றப்படாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரி அம்பலத்தடையார் மடத்து வீதியில் உள்ள ஒரு மின் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கேபிள் ஒயர்கள் திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கியது. இதைகண்ட பொதுமக்கள் புதுச்சேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மின்கம்பத்தில் எரிந்து கொண்டிருந்த கேபிள்கள் மீது 'ட்ரை பவுடரை' பீச்சியடித்து தீயை அணைத்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us