UPDATED : நவ 12, 2026 10:30 PM
ADDED : நவ 12, 2026 10:30 PM
அரியாங்குப்பம்: காரை சோதனை பார்க்க ஓட்டி சென்ற போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அரியாங்குப்பத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் சாலையில் தனியார் கார் கம்பெனியின் சர்வீஸ் சென்டர் உள்ளது. காரை சர்வீஸ் செய்வதற்கு புதுச்சேரியை சேர்ந்த காரின் உரிமையாளர் கம்பெனியில் விட்டிருந்தார். காரின் பிரச்னையை பார்க்க சர்வீஸ் சென்டரில் உள்ள மெக்கானிக் காரை ஓட்டி சென்று சோதனை செய்தார்.
அரியாங்குப்பம் புறவழிச்சாலை, மாதா கோவில் அருகே நேற்று மாலை 7:00 மணியளவில் சென்ற போது, காரின் இன்ஜினில் இருந்து திடீரென புகை ஏற்பட்டது. மெக்கானிக் காரை ஓரமாக நிறுத்தி பேனட்டை திறந்து பார்ப்பதற்குள் தீப்பிடிக்க ஆரம்பித்தது. தகவல் கிடைத்த புதுச்சேரி
தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அனைத்தனர்.
சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் இன்ஜின் இருக்கும் முன்பகுதி மட்டும் சேதமடைந்தது. கார் தீப்பிடித்தற்கான காரணத்தை தீயணைப்பு துறையினர் விசாரித்த போது எலக்ட்ரீக் ஒயரில் இருந்து சார்ட் சர்குட் ஏற்பட்டு தீப்பிடித்ததாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
