ADDED : அக் 30, 2024 04:19 AM
புதுச்சேரி : தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகளை வெடித்து, விபத்து ஏற்பட்டால் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தீயணைப்பு துறை கோட்ட அதிகாரி இளங்கோ விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மாநில மக்கள் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாட உள்ளனர். இந்த கொண்டாட்டத்தில் பட்டாசுகளை வெடிக்கும் போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், உயரே சென்று வெடிக்கும் அவுட், ராக்கெட் போன்ற பட்டாசுகள் மற்றும் சீன பட்டாசுகள் விற்பது, வியாபாரிகளின் ஒத்துழைப்புடன் தடை செய்யப்பட்டுள்ளது. தடை மீறி சீன பட்டாசு மற்றும் அவுட், ராக்கெட்டுகளை உபயோகித்து, அதனால் உயிர் சேதம், பொருட் சேதம் ஏற்பட்டால் அதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

