/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிப்.9ம் தேதி தீயணைப்பு துறை தேர்வு
/
பிப்.9ம் தேதி தீயணைப்பு துறை தேர்வு
ADDED : டிச 25, 2024 07:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி தீயணைப்பு துறையில் காலியாக உள்ள தீயணைப்பு வீரர் மற்றும் ஓட்டுனர் பணியிடத்திற்கான தேர்வு வரும் பிப்., 9ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து அரசு சார்பு செயலர் (தேர்வு பிரிவு ) ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி தீயணைப்பு துறையில், தீயணைப்பு வீரர் மற்றும் தீயணைப்பு ஓட்டுனர் நிலை -3 பணியிடத்திற்கான தேர்வு வரும் பிப்., 9ம் தேதி புதுச்சேரியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வுகளுக்கான அனுமதி சீட்டு பதிவிறக்கம், தேர்வு மையங்கள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

