ADDED : பிப் 11, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் இளங்கோ. இவர், தனது பைக்கை, தவளக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள சடா நகர் நண்பர் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12:30 மணியளவில், திடீரென அந்த பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது. வீட்டிலிருந்தவர்கள் வந்து, தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
இதுகுறித்து, தகவலறிந்த தவளக்குப்பம் போலீசார், எரிந்த பைக்கை பார்வையிட்டு விசாரணை செய்து, அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்தனர். மர்ம நபர் ஒருவர், பாட்டிலில் பெட்ரோல் எடுத்து வந்து, பைக் மீது ஊற்றி தீ வைத்துச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில், பைக்கிற்கு தீ வைத்து சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

