ADDED : பிப் 20, 2025 06:35 AM

புதுச்சேரி: பிள்ளைச்சாவடியில் மீன்பிடி வலையை தீ வைத்து கொளுத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிள்ளைச்சாவடி கடற்கரையில் வைத்திருந்த மீன்பிடி வலை, மர்ம நபர்களால் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து காலாப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து பிள்ளைச்சாவடி மீனவர் சித்திரவேல் கூறுகையில், 'மத்தி மீன் பிடிக்கும் சுத்து வலை சீசன் இல்லாததால் எனது வலையுடன் எங்கள் ஊரைச் சேர்ந்த ராகவன், கோகுல், கார்த்தி ஆகியோர்களின் நான்கு வலைகளும் கடற்கரையில் ஒரே இடத்தில் வைத்திருந்தோம்.
நேற்று மதியம் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் வலைகளுக்கு தீவைத்து எரித்துச் சென்றுள்ளனர். தகவலறிந்து சென்று பார்த்தபோது இந்த தீயில் எங்களின் ரூ. 5 லட்சம் மதிப்பிலான நான்கு வலைகளும் முழுதுமாக எரிந்துள்ளன.
இச்சம்பவம் குறித்து காலாப்பட்டு போலீசில் நிலையம் மற்றும் மீன்வளத்துறைக்கு புகார் அளித்துள்ளோம்' என்றார்.

