/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூட்டுறவு சங்கம் சார்பில் பட்டாசு அரியாங்குப்பத்தில் கடை
/
கூட்டுறவு சங்கம் சார்பில் பட்டாசு அரியாங்குப்பத்தில் கடை
கூட்டுறவு சங்கம் சார்பில் பட்டாசு அரியாங்குப்பத்தில் கடை
கூட்டுறவு சங்கம் சார்பில் பட்டாசு அரியாங்குப்பத்தில் கடை
ADDED : அக் 28, 2024 04:47 AM

அரியாங்குப்பம் : ரேஷன் கடை கூட்டுறவு சங்கம் சார்பில், பட்டாசு கடையை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு, புதுச்சேரியில், பட்டாசு கடைகள் வைக்க 130 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், 115 பேர் பட்டாசு கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டது. அதனை அடுத்து, ரேஷன் கடை கூட்டுறவு சங்கம் சார்பில், பல்வேறு இடங்களில், மலிவு விலையில், பட்டாசு கடைகள் திறக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில், பட்டாசு கடை திறக்கப்பட்டது. முதல்வர் ரங்கசாமி, பட்டாசு கடையை திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தார். பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், கூட்டு சங்கத்தின் நிர்வாகிகள், என்.ஆர்., காங்., முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.