பி.சி.சி., கிரிக்கெட் போட்டி ஏம்பலம் அணிக்கு முதல் பரிசு
பி.சி.சி., கிரிக்கெட் போட்டி ஏம்பலம் அணிக்கு முதல் பரிசு
ADDED : ஜூன் 04, 2026 09:31 AM

வில்லியனுார்: வில்லியனுார் பெரியபேட் பி.சி.சி., கிளப் சார்பில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு, தி.மு.க., அமைப்பாளர் சிவா பரிசு வழங்கி பாராட்டினார்.
வில்லியனூர் தொகுதி பெரிய பேட் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பி.சி.சி., கிரிக்கெட் கிளப் சார்பில், முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து 15 அணிகள் கலந்து கொண்டன.
இதில், வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிப்பு விழாவில், தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா பங்கேற்று, போட்டியில் முதலிடம் பிடித்த ஏம்பலம் அணிக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம் ரூபாயை, தனது சொந்த செலவில் வழங்கி, கேடயம் அளித்து வாழ்த்தி பேசினார்.
இதில், பி.சி.சி., நிர்வாகிகள், தி.மு.க., நிர்வாகிகள் அங்காளன், செல்வநாதன், தர்மராஜ், ஹரி கிருஷ்ணன், அன்பு (எ) அன்பழகன், அஞ்சாப்புலி, செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
