தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து வி.சி., மறியல்

 பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து வி.சி., மறியல்

 பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து வி.சி., மறியல்


ADDED : ஜூன் 04, 2026 09:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 09:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு மற்றும் மும்மொழி கல்விக் கொள்கை திட்டத்தை கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், புதுச்சேரி - கடலுார் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியக்கோவில் சந்திப்பு அருகே நடந்த போராட்டத்திற்கு, மாவட்டச் செயலாளர் தாயப்பன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல் காங்., நிர்வாகிகள் கோபு, துணைத் தலைவர் தாண்டவராயன், அரிகிருஷ்ணன் பக்கிரி, முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில், பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு மற்றும் மும்மொழி கல்விக் கொள்கை திட்டத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டத்தினால், புதுச்சேரி - கடலுார் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us