ADDED : ஜூன் 04, 2026 09:29 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பேரிடம் ரூ. 43 ஆயிரம் மோசடி செய்த ஆன்லைன் கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் மொபைலில் பீரி பயர் விளையாடினார். அப்போது அந்த சிறுவனை தொடர்பு கொண்டு பிரீ பயர் கேமின் புதிய ஐடி தருவாதாக மர்ம நபர் கூறினார். அதனை நம்பி அந்த சிறுவன் தந்தையின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 29 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார். அதேபோல் பிச் சவீரன்பேட் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் மர்ம நபர் தொடர்பு கொண்டு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதற்காக அந்த பெண் ரூ.10 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார். அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் குறைந்த வட்டியில் லோன் வாங்கி தருவதாக மர்ம நபர் கூறியதை நம்பி அவர் ரூ. 4 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
