/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா
/
முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா
ADDED : அக் 29, 2025 06:34 AM

புதுச்சேரி: புதுச்சேரி கலிதீர்த்தால் குப்பம் மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.
தக் ஷஷிலா பல்கலைக் கழகத்தின் வேந்தரும், மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான தனசேகரன் தலைமை தாங்கி பேசுகையில், 'மாணவர் கள் தங்கள் பெற்றோரிடம் எப்போதும் பொறுப்புடனும், மரியாதையுடனும் இருக்க வேண்டும்' என்றார்.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம், தக் ஷஷிலா பல்கலைக்கழக இணைவேந்தர் நிலா பிரியதர்ஷினி முன்னிலை வகித்தனர். கல்லுாரி டீன் கார்த்திகேயன் வரவேற்றார்.
தலைமை விருந்தினர் புதுச்சேரி அரசின் தலைமை செயலர் ஷரத் சவுகான் பேசினார். இயக்குனர் காக்னே வாழ்த்தி பேசினார்.
மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

