/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்புகள் நாளை துவக்கம்
/
அரசு கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்புகள் நாளை துவக்கம்
அரசு கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்புகள் நாளை துவக்கம்
அரசு கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்புகள் நாளை துவக்கம்
ADDED : செப் 02, 2025 03:29 AM
புதுச்சேரி: புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில், முதலாமாண்டு வகுப்புகள் நாளை (3ம் தேதி) துவங்குகிறது.
இது குறித்து கல்லுாரி முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் 2025- - 2026 கல்வியாண்டிற்கான, அனைத்து முதலாமாண்டு வகுப்புகளும் நாளை (3ம் தேதி முதல் தொடங்கப்படுகின்றன. காலைப் பிரிவில் (8.00 -1.00 மணி) இளம் அறி வியல் ஆனர்ஸ் (பி.எஸ்.சி., ஆனர்ஸ்), இளம் வணிகவியல் ஆனர்ஸ் (பி.காம்., ஆனர்ஸ்), இளம் நிருமச் செயலரியல் ஆனர்ஸ்(பி.காம்., கார்ப்ரேட் செக்க ரட்டரிஷிப் ஆனர்ஸ்) ஆகி ய வகுப்புகளும்.
மாலை பிரிவில் (மதியம் 1.15 முதல் மாலை 6.15 மணி வரை) இளங்கலை ஆனர்ஸ் (அனைத்து பி.ஏ., ஆனர்ஸ் கோர்ஸ்) தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச், பொருளாதாரம், வரலா று வகுப்புகளும் தொடங்கப்படுகின்றன. முதல் நாள் அன்று ஒரு மணி நேரம் மட்டுமே வகுப்புகள் நடை பெறும். வகுப்புகள் முடிந்தவுடன் மாணவியர்கள் தங்கள் பெற்றோர்களுடனே வீட்டிற்குச் செல்லலாம்.