/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவ கல்லுாரியில் முதலாமாண்டு துவக்க விழா
/
மருத்துவ கல்லுாரியில் முதலாமாண்டு துவக்க விழா
ADDED : அக் 25, 2024 06:25 AM

புதுச்சேரி: புதுச்சேரி லட்சுமி நாராயணா மருத்து கல்லுாரியில், எம்.பி.பி.எஸ். மற்றும் நர்சிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா நடந்தது.
கல்லுாரி டீன் ஜெயலட்சுமி வரவேற்றார். பாரத் கல்விக்குழு தலைவர் சந்தீப் ஆனந்த், நிர்வாக இயக்குனர் சுவதோ சந்தீப், ரஷிகா சந்தீப் ஆகியோர் தலைமை தாங்கி விழாவை துவக்கி வைத்தனர்.மருத்துவர் பாலகுருநாதன், மருத்துவ படிப்புடன், மருத்துவ துறையில் உள்ள நவீன தொழிப்நுட்பங்களை மாணவர்கள் கற்று கொள்ள வேண்டும் என பேசினார்.நிகழ்ச்சியில், மருத்துவ கண்காணிப்பாளர் சந்திரகுமார் உட்பட மருத்துவர்கள், மாணர்கள், பெற்றோர்கள், மருத்து கல்லுாரி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கல்லுாரி தலைமை நிர்வாக அதிகாரி அன்பு செய்திருந்தார்.