ADDED : ஜூலை 12, 2025 03:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை சார்பில், தேசிய மீன் வளர்ப்போர் தின விழா பனையடிகுப்பம் ஜே.கே. மீன்பண்ணையில் நடந்தது.
நலத்துறை இயக்குனர் இஸ்மாயில் தலைமை தாங்கினார். துணை இயக்குனர்கள் கவியரசன், ஷாஜிமா முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பளராக சென்னை உவர் நீர் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி சுப்புராஜ் பங்கேற்று கொடுவா மீன் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார்.
மீன்வளத்துறை அரசு செயலர் மணிகண்டன், காணொலி மூலம் மீன் வளர்ப்போர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், பாரதிதாசன் நன்னீர் மீன் விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மீன் வளர்ப்போர் கலந்து கொண்டனர்.
மோகன்ராஜ் நன்றி கூறினார்.