/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தடையை மீறி கடலுக்கு சென்றால் நலத்திட்ட உதவிகள் நிறுத்தம் மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை

ADDED : அக் 17, 2024 04:42 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் தடையை மீறி கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்படும் என, மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மீன்வளத் துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கனமழை எச்சரிக்கை காரணமாக, கடலுக்குள் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். கடலுக்குள் சென்றவர்கள் உடனடியாக திரும்ப வேண்டும் என மீனவளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டது.
இதையேற்று நேற்று முன்தினம் முதல் பெரும்பாலான மீனவர்கள் கரைக்கு திரும்பினர். மேலும், 3வது நாளாக நேற்றும் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. ஏற்கனவே, கடலுக்கு சென்றவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் கரை திரும்பினர். இதனால் புதுச்சேரியில் அனைத்து படகுகளும், பாதுகாப்பாக துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிலர் மீன் பிடிக்க ஆழ் கடலுக்கு சென்று இருப்பதாக மீன்வளத் துறைக்கு புகார் வந்துள்ளது. ஆகையால், தடையை மீறி கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.