/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மரத்தில் பைக் மோதல் மீன்பிடி தொழிலாளி பலி
/
மரத்தில் பைக் மோதல் மீன்பிடி தொழிலாளி பலி
ADDED : ஜன 09, 2026 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் மரத்தில் பைக் மோதி வாலிபர் இறந்தார்.
காரைக்கால், கிளிஞ்சல்மேடு, சுனாமி குடியிருப்பு, வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ரகு, 20; மீன்பிடி தொழிலாளி. நேற்று அதிகாலை பைக்கில் வீட்டிலிருந்து மீன்பிடித்துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
காரைக்கால்மேடு அருகே சென்ற போது சாலையோர மரத்தில் பைக் மோதியது. தலையில் படுகாயமடைந்த ரகுவை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். விபத்து குறித்து நகர போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

