ADDED : மார் 04, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : காரைக்காலில் மீன் இறக்கும் போது நிலைதடுமாறி தண்ணீரில் விழுந்த மீனவர் சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.
காரைக்கால் மேடு சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராமக்கண்ணன்,52; இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.நேற்று முன்தினம் ராமக்கண்ணன் மீன்பிடிக்க பட்டினச்சேரியை சேர்ந்த முனியாண்டி படகில் மீன்பிடிக்க சென்றுள்ளார்.பின்னர் நேற்று அதிகாலை மீன்பிடித்துவிட்டு கருக்களாசேரி மீன்பிடித்துறைமுகத்தில் மீன் இறக்கும் போது ராமக்கண்ணன் நிலை தடுமாறி தண்ணீரில் விழுந்துள்ளார்.
பின் சக மீனவர்கள் உதவியுடன் அவரை மீட்டு அரசு மருந்துவனையில் சேர்த்தனர். அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புகாரின் பேரில் நிரவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

