தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ படகு கவிழ்ந்து மீனவர் காயம்

 படகு கவிழ்ந்து மீனவர் காயம்

 படகு கவிழ்ந்து மீனவர் காயம்


ADDED : பிப் 25, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: கடலில் ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததில் மீனவர் படுகாயத்துடன் தப்பினார்.

தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு வடக்கு பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ், 28; மீனவர். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த சதீஷ்,32, உட்பட 5 பேர் நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

மீன் பிடித்து கொண்டிருக்கும் போது, பலத்த காற்று அடித்ததால், ராட்சத அலை ஏற்பட்டு படகு கவிழ்ந்தது. அதில் சதீஷ் படுகாயமடைந்தார். இவருடன் சென்ற மீனவர்கள் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இச்சம்பவம் குறித்து, கடலோர காவல்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us