/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காட்டுப்பன்றி தாக்கி மீனவர் படுகாயம்
/
காட்டுப்பன்றி தாக்கி மீனவர் படுகாயம்
ADDED : டிச 22, 2024 07:17 AM

புதுச்சேரி : காலாப்பட்டு பகுதியில் காட்டுப் பன்றி தாக்கி நடை பயிற்சி சென்ற முதியவர் காயமடைந்த சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலாப்பட்டு சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கோதண்டபாணி, 65; மீனவர். இவர் நேற்று காலை அதே பகுதியில் நடை பயற்சி மேற்கொண்டார். அப்போது புதர் பகுதியில் மறைந்திருந்த காட்டுப் பன்றி ஒன்று திடீரென பாய்ந்து கோதண்டபாணியை கடித்து, முட்டி, துாக்கி வீசியது.
அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஒடி வந்தனர். அதையடுத்து அந்த காட்டுப் பன்றி அங்கிருந்து தப்பியோடியது. படுகாயமடைந்த கோதண்டபாணி காலாப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் காட்டு பன்றிகளை வனத்துறையினர் பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.