/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிப்பு
/
மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிப்பு
ADDED : நவ 25, 2024 05:26 AM
புதுச்சேரி : புதுச்சேரி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை இயக்குனர் தெய்வசிகமாணி(பொ) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் விடுத்துள்ள அறிக்கையின்படி, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாளை (26ம் தேதி) தமிழகம்- புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும், 27, 28 ம் தேதி, தமிழுக- புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், புதுச்சேரி பகுதி மீனவர்கள் யாரும் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறும், நாளை (26ம் தேதி) முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் கடலில் உள்ள விசைப்படகுகள் அனைத்தும் இன்று 25ம் தேதிக்குள் கரை திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.