/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீனவர் தொழில்முனைவோர் திட்டம் வீராம்பட்டினத்தில் கலந்தாய்வுக் கூட்டம்
/
மீனவர் தொழில்முனைவோர் திட்டம் வீராம்பட்டினத்தில் கலந்தாய்வுக் கூட்டம்
மீனவர் தொழில்முனைவோர் திட்டம் வீராம்பட்டினத்தில் கலந்தாய்வுக் கூட்டம்
மீனவர் தொழில்முனைவோர் திட்டம் வீராம்பட்டினத்தில் கலந்தாய்வுக் கூட்டம்
ADDED : ஜன 30, 2024 05:58 AM
புதுச்சேரி : மீனவர் தொழில்முனைவோர் திட்டம் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தில் மீனவ குழுக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சீமா ஜாக்ரான் மஞ்ச் அமைப்பும், இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து, மீனவர் தொழில்முனைவோர் திட்டம் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தன.
வீராம்பட்டினத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்துக்கு, சீமா ஜாக்ரன் மன்ச் அமைப்பை சேர்ந்த, தேசிய மீனவர் பேரவையின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான இளங்கோ, எழுத்தாளர் ராமஜெயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானி டாக்டர் கீதாலட்சுமி, அதன் நிர்வாக உறுப்பினர் டாக்டர் சண்முகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு, மீனவர் தொழில்முனைவோர் திட்டம் குறித்தும், இதற்கு மத்திய அரசு வழங்கும் தொழில்நுட்ப உதவிகள் குறித்தும் விளக்கி கூறினர்.மேலும், மீனவர்களின் தேவைகள் குறித்து கேட்டறியப்பட்டு விவாதிக்கப்பட்டது. உள்நாட்டு மீன்பிடி தொழில் வளர்ச்சிக்கான தொழில்நுட்பங்கள் மற்றும் வர்த்தக நுட்பங்கள் எடுத்துரைக்கப்பட்டது.
கடல் சார்ந்த பொருட்களை மதிப்புகூட்டி விற்பனை செய்வது எப்படி என்பது குறித்தும், இதற்கான தொழில்நுட்பங்கள் குறித்தும் நிபுணர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
கூட்டத்தில் மீனவ குழுக்களின் பிரதிநிதிகளும், மீன்வளம் சார்ந்த தொழில் முனைவோர்களும் பங்கேற்றனர். வீராம்பட்டினம் மற்றும் சுற்றியுள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.