/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீனவர் விடுதலை வேங்கைகள் ஆர்ப்பாட்டம்
/
மீனவர் விடுதலை வேங்கைகள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 26, 2025 08:06 AM

புதுச்சேரி : தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள், மா.கம்யூ., சார்பில் கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தில் மீனவர் கிராமங்களின் பொது சொத்துகளை பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் நிறுவனர் மங்கையர் செல்வன் தலைமை தாங்கினார். மா.கம்யூ., மாநில செயலர் ராமசந்திரன் துவக்கிவைத்து பேசினார். எதிர்கட்சித் தலைவர் சிவா, எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, வைத்தியநாதன், வி.சி., மாநில முதன்மை செயலர் தேவ பொழிலன், தி.மு.க., அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார், மலையாளத்தான், தணிகாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், புதுச்சேரிக்கான வரைவு கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தில் பதிவு செய்யப்படாமல் திட்டமிட்டு தவிர்க்கப்பட்ட 551.2 ஏக்கர் மீனவர் கிராமங்களின் பொது சொத்துகளை உடனடியாக வரைவு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும்.
கடல் மற்றும் கடற்கரை வளங்களை பாதுகாத்திடும் வகையில், கடல் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.