/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீன்பிடி படகுகள் கரையில் நிறுத்தம்
/
மீன்பிடி படகுகள் கரையில் நிறுத்தம்
ADDED : நவ 16, 2025 11:09 PM
பாகூர்: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், புதுக்குப்பம், பனித்திட்டு, நரம்பை உள்ளிட்ட கிராமப்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால், நேற்று முதல் மழை பெய்து வருகிறது. மேலும், இன்று (17ம் தேதி) புதுச்சேரி, கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட மாவடங்களில் கன மழை பெய்ய கூடும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகூர் பகுதியில் மூ.புதுக் குப்பம், பனித்திட்டு, நரம்பை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

