/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீராம்பட்டினத்தில் ரூ. 46.16 கோடியில் மீன்பிடி துறைமுகம்
/
வீராம்பட்டினத்தில் ரூ. 46.16 கோடியில் மீன்பிடி துறைமுகம்
வீராம்பட்டினத்தில் ரூ. 46.16 கோடியில் மீன்பிடி துறைமுகம்
வீராம்பட்டினத்தில் ரூ. 46.16 கோடியில் மீன்பிடி துறைமுகம்
ADDED : நவ 05, 2024 06:57 AM

அரியாங்குப்பம்: வீராம்பட்டினத்தில் 46.16 கோடி ரூபாய் மதிப்பீல், மீன்பிடி துறைமுகம் கட்டுமானம் மற்றும் விரிவாக்க பணியை, முதல்வர் ரங்கசாமி அடிக்கல் நாட்டி, துவக்கி வைத்தார்.
அரியாங்குப்பம் தொகுதி, சாமிநாத நாயக்கர் வீதி, சுப்புராய பிள்ளை வீதி, பூரணாங்குப்பம் வீதி உள்ளிட்ட இடங்களில் சாலையை மேம்படுத்த, பொதுப்பணித்துறை மூலம் ரூ. 2.60 கோடிக்கான பணியை முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலை (தெற்கு) கோட்டத்தின் மூலம், வீராம்பட்டினம் மீனவ கிராமம், தேங்காய்த்திட்டு, (அரிக்கன்மேடு ) பகுதியில், மத்திய அரசு நிதி வழங்கும் திட்டம் ( சி.எஸ்.எஸ்) பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 53.38 கோடி ரூபாய் அனுமதி பெறப்பட்டு, 46.16 கோடியில் மீன் பிடி துறைமுகம் கட்டுமானம் மற்றும் விரிவாக்க பணியை முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், பாஸ்கர் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் வீரச்செல்வன், செயற் பொறியாளர் சந்திரகுமார், பாலசுப்ரமணியன், உதவிப் பொறியாளர் கோபி, இளநிலைப் பொறியாளர் பிரபாகர் உட்பட என்.ஆர்., காங்., நிர்வாகிகள், வீராம்பட்டினம் பஞ்சாயத்து, முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.