/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊர்காவல்படை வீரர் பணிக்கு உடற்தகுதி தேர்வு பிப்., 1ல் துவக்கம்; தலைமையகம் அறிவிப்பு
/
ஊர்காவல்படை வீரர் பணிக்கு உடற்தகுதி தேர்வு பிப்., 1ல் துவக்கம்; தலைமையகம் அறிவிப்பு
ஊர்காவல்படை வீரர் பணிக்கு உடற்தகுதி தேர்வு பிப்., 1ல் துவக்கம்; தலைமையகம் அறிவிப்பு
ஊர்காவல்படை வீரர் பணிக்கு உடற்தகுதி தேர்வு பிப்., 1ல் துவக்கம்; தலைமையகம் அறிவிப்பு
ADDED : ஜன 07, 2024 05:02 AM
நாளை முதல் அட்மிட் கார்டு டவுன்லோடு செய்யலாம்
புதுச்சேரி போலீசில் ஊர்காவல்படை வீரர்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஆண்டு அக்., மாதம் வெளியானது. இதில், 420 ஆண், 80 பெண் ஊர்காவல்படை வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆண்கள் பிரிவில் புதுச்சேரியில் 290, காரைக்காலில் 68, மாகி 37, ஏனாமில் 25 பேரும், பெண்கள் பிரிவில் புதுச்சேரியில் 58, காரைக்காலில் 12, மாகி 9, ஏனாமில் ஒரு இடம் நிரப்பட உள்ளது.பணி நிரப்புவதற்கான விண்ணப்பம் ஆன்லைன் வழியாக கடந்த அக்டோபர் 30ம் தேதி முதல் நவ., 29ம் தேதி வரை விண்ணப்பம் பெறப்பட்டது. இதில் ஆண்கள் பிரிவில் 15,697 பேரும், பெண்கள் பிரிவில் 4492 பேர் என மொத்தம் 20,189 பேர் விண்ணப்பித்துள்ளனர்.உடற்தகுதி தேர்வில் ஆண்களுக்கு, 800 மீட்டர் துாரத்தை 2 நிமிடம் 50 நொடியில் கடக்க வேண்டும். நீளம் தாண்டுதல் 3.80 மீட்டரும், உயரம் தாண்டுதல் 1.20 மீட்டரும், கடைசியாக 100 மீட்டர் ஓட்டத்தை 20 நொடியில் கடக்க வேண்டும். பெண்கள் 200 மீட்டர் ஓட்டம் 45 நொடியிலும், நீளம் தாண்டுதல் 2.75 மீட்டரும், 0.90 மீட்டர் உயரம் தாண்ட வேண்டும்.உடற்தகுதி தேர்வில் வெற்றி பெறுவோருக்கு, 10ம் வகுப்பு தரத்திலான 100 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்படும்.அப்ஜக்டிவ் டைப் வினாக்கள் கேட்கப்படும். கணிதம், பொது அறிவு வினாக்கள் 25, வரலாறு, புவியியல், குடிமையியல் பாடங்கள் தொடர்பாக 25, பொது அறிவு மற்றும் சமீபத்தில் நிகழ்வுகள் 50 வினாக்கள் இடம்பெறும். தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்துடன், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய ஏதேனும் ஒரு பிராந்திய மொழியில் இருக்கும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.25 சதவீத மதிப்பெண் குறைக்கப்படும்.
ஒன்றுக்கும்மேற்பட்ட பதில் அளித்தால் அவை தவறான பதில் என கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.போலீஸ் தலைமைய சீனியர் எஸ்.பி. அனிதா ராய் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;புதுச்சேரி போலீஸ் ஊர்காவல்படைக்கு பெற்ற விண்ணப்பங்கள் பரிசீலித்து இறுதி செய்யப்பட்டுள்ளது.
உடற்தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளது. உடற்தகுதிக்கான கடிதம் அனுமதி கடிதத்தை இணையதளத்தில் நாளை 8ம் தேதி, காலை 10:00 மணி முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.வரும் பிப். 1ம் தேதி முதல் 23ம் தேதி வரை, கோரிமேடு போலீஸ் மைதானத்தில் உடற்தகுதி தேர்வு நடக்கிறது. ஊர்காவல்படை வீரர் தேர்வு குறைதீர்வு கமிட்டியும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், கமிட்டி முன்பு ஆஜராகி தங்களின் விண்ணப்ப விபரங்களை பெறலாம். உடற்தகுதி தேர்வுக்கு வரும் தேர்வர்கள், அடையாள சான்றுக்கான ஏதேனும் ஒரு அடையாள அட்டை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.