sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்

/

சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்

சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்

சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்


ADDED : அக் 23, 2025 06:35 AM

Google News

ADDED : அக் 23, 2025 06:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சாரம் சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

சாரம் முத்துவிநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி, நாகமுத்துமாரியம்மன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.

இதையொட்டி இரவு 7 மணிக்கு அம்மனுக்கு அபி ேஷக ஆராதனை நடந்தது. நேற்று காலை 10.30 மணிக்கு காப்பு கட்டுதல், கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8 மணிக்கு அன்ன வாகனத்தில் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

வரும் 3ம் தேதி வரை காலை, மாலை இருவேளையும் யாக சாலை பூஜை, இரவில் சாமி வீதி உலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக வரும் 27ம் தேதி இரவு 7 மணிக்கு சூரசம்ஹார உற்சவம், மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.

28 ம் தேதி இரவு 7 மணிக்கு வள்ளி தேவசேனா - சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. 31ம் தேதி மாலை 5 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், 3ம் தேதி காலை 8 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நீலகண்டன் செய்துள்ளார்.






      Dinamalar
      Follow us