/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டி.ஐ.ஜி., தலைமையில் கொடி அணிவகுப்பு
/
டி.ஐ.ஜி., தலைமையில் கொடி அணிவகுப்பு
ADDED : அக் 30, 2024 04:37 AM

புதுச்சேரி : கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடக்கும் ஸ்ட்ரீட் கிரைம் சம்பவங்களை தடுக்க டி.ஐ.ஜி., தலைமையில் நேரு வீதி கடற்கரை சாலையில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது.
தீபாவளி பண்டிகைக்காக துணிகள் வாங்க நேரு வீதி, காந்தி வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை பயன்படுத்தி ஸ் ரீட் கிரைம் என கூறும் பிக்பாக்கெட், செயின்பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க புதுச்சேரி சட்டம் ஒழுங்கு டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்ற சத்திய சுந்தரம் தலைமையில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது.
சீனியர் எஸ்.பி.க்கள் கலைவாணன், நாரா சைதன்யா, பிரவீன்குமார் திரிபாதி, எஸ்.பி.க்கள் வீரவல்லபன், செல்வம், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், ஜெய்சங்கர், செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நேரு வீதியில் துவங்கிய கொடி அணிவகுப்பு, கடற்கரை சாலை வழியாக சென்று புஸ்சி வீதியில் முடிந்தது.