ADDED : ஜூலை 19, 2025 02:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : உழவர்கரை பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கொடி கம்பங்களை நகராட்சி ஊழியர்கள் அதிரடியாக அகற்றினர்.
ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுபடி, சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கொடி கம்பங்கள், பேனர்கள், கட்அவுட்களை அகற்றும்படி நகராட்சி, பொதுப்பணித்துறையினருக்கு கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார்.
அதையடுத்து, உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட சாலையில், போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையிலும், அனுமதியின்றி வைத்திருந்த அரசியல் கட்சி, தொழிற்சங்க கொடி கம்பங்களை நேற்று நகராட்சி, அதிகாரிகள், ஊழியர்கள் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றினர். கொடிக் கம்பங்களை அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

