/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை
/
தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை
தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை
தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை
ADDED : அக் 23, 2025 01:09 AM

பாகூர்: சாத்தனுார் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு உயர்த்தப்பட்டுள்ளதால், பாகூர் தென்பெண்ணையாற்றின் கரையோர கிராமங்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாத்தனுார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக, அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், புதுச்சேரி தென்பெண்ணையாற்று பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.குருவிநத்தம் சித்தேரி அணைக் கட்டு நிரம்பி வழியும் நிலையில், தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், கொம்மந்தான்மேடு படுகை அணையை மூழ்டித்து, வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்நிலையில், சாத்தனுார் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 5,000 கன அடியில் இருந்து நேற்று மாலை,9,000 கன அடியாக உயர்த்தப்பட்டது.
இதனால், தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது.இதையடுத்து, பாகூர் தாலுகா அலுவலக ஊழியர்கள் குருவிநத்தம், சோரியாங்குப்பம், பரிக்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், கொம்மந்தான்மேடு உள்ளிட்ட தென்பெண்ணையாற்றின் கரையோர கிராமங்களில் ஒலி பெருக்கி மூலமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
அப்போது, பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, கடந்து செல்லவோ, குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, ஆற்றில் நின்று மொபைல் போன் கொண்டு செல்பி எடுப்பது கூடாது என அறிவுறுத்தப்பட்டது.இதனிடையே, தெற்கு மாவட்ட சப் கலெக்டர் குமரன், பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடன் சென்று, கொம்மந்தான்மேடு படுகை அணை மற்றும் தென்பெண்ணையாற்றின் கரையோர கிராம பகுதியை பார்வையிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.