ADDED : ஜூன் 27, 2026 12:35 AM

புதுச்சேரி: திரைக்கலையில் தேசிய விருதுகள் பெற்ற இயக்குனர் பாரதிராஜாவுக்கு, மலர் வணக்க நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி அவனி கலை பண்பாட்டு சங்கம் மற்றும் புதுச்சேரி நடிகர்கள்-பன்முக கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் இயக்குனர் பாரதிராஜாவுக்கு மலர்வணக்க நிகழ்ச்சி குயவர்பாளையம் கீர்த்தி மகாலில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், அமைச்சர் சிவக்கொழுந்து கலந்து கொண்டு பாரதிராஜா உருவப்படத்திற்கு, மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.
புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலர் முகமது ஹசன் அபித், இயக்குனர் சுரேஷ் ராஜன், திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் இயக்குனர் செல்வமணி, பேராசிரியர் பர்வீன் சுல்தானா, திரைப்பட தனிக்குழு முன்னாள் உறுப்பினர் ராஜம் நாதன், திரைப்பட பெப்சி அமைப்பின் பொது செயலாளர் சாமிநாதன், ஆவணப் பட இயக்குனர் ரவி குணவதி மைந்தன், கண்மணி கிரியேஷன்ஸ் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பத்மஸ்ரீ, விருது பெற்ற விருதாளர்கள் பாரதிராஜாவுக்கு சிறப்பு மலர் வணக்கம் செலுத்தினர்.
ஏற்பாடுகளை புதுச்சேரி அவனி கலை பண்பாட்டு சங்க தலைவர் கலியபெருமாள், செயலர் குமரன், பொருளாளர் அருள் செல்வம், துணை தலைவர் சுபாஷினி, துணை செயலாளர்கள் பிரபாகரன், அருள்ராஜ், ஆளவந்தார் மற்றும் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
