/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மலர், காய் கனி கண்காட்சி காரைக்காலில் துவங்கியது
/
மலர், காய் கனி கண்காட்சி காரைக்காலில் துவங்கியது
ADDED : ஜன 18, 2024 04:06 AM

காரைக்கால்: காரைக்காலில் வேளாண்துறை சார்பில் நான்கு நாட்கள் மலர், காய்கனி கண்காட்சி நேற்று துவங்கியது. ஏராளமானோர் பார்வையிட்டனர்.
காரைக்கால் கார்னிவெல்லையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில், உள்விளையாட்டு அரங்கில் மலர், காய்கனி கண்காட்சி துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது.
எம்.எல்.ஏ.க்கள் சிவா, நாகதியாகராஜன் முன்னிலை வகித்தனர். கலெக்டர் குலோத்துங்கன் வரவேற்றார்.
நாஜிம் எம்.எல்.ஏ., கண்காட்சியை துவக்கி வைத்தார்.
வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் மலர் மற்றும் காய், கனி கண்காட்சி வரும் 19ம் தேதி வரை நடக்கிறது. இதில் 100க்கும் மேற்பட்ட பூச்செடிகள், தானியம், காய் கனிகளைக் கொண்டு படிவம் (கார்விங்) தயாரித்தல், வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம், நிறுவனத் தோட்டம், பூந்தொட்டி மற்றும் மூலிகைச் செடிகள் வைக்கப்பட்டுள்ளன.
போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுவோர்களுக்கு மலர் ராஜா, மலர் ராணி விருது வழங்கப்பட உள்ளது.
கண்காட்சியினை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கலெக்டர் பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில் வனத்துறை அதிகாரி விஜி, வேளாண்துறை இயக்குனர் வசந்தகுமார், கூடுதல் வேளாண் இயக்குனர் கணேசன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.