/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாகியில் மலர் கண்காட்சி முதல்வர் துவக்கி வைப்பு
/
மாகியில் மலர் கண்காட்சி முதல்வர் துவக்கி வைப்பு
ADDED : பிப் 20, 2025 06:33 AM

புதுச்சேரி: மாகி பிராந்தியம் பள்ளூரில் 5 நாட்கள் நடைபெறும் மலர்க் கண்காட்சியினை முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார்.
புதுச்சேரி, மாகி பிராந்தியத்தில் 5 நாட்கள் நடக்கும் மலர் கண்காட்சி துவக்கி விழா நேற்று நடந்தது. வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி, மலர் கண்காட்சியை துவக்கி வைத்தார். விழாவில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, ரமேஷ் பரம்பத் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., வல்சராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மலர் கண்காட்சியில் காய்-கனி, தோட்டப் பயிர் விதைகள் உள்ளிட்ட உழவரகம் சார்ந்த பொருட்கள் இடம்பெற்றன. சிறுவர்- சிறுமிகளுக்கான புஷ்பராணி மற்றும் புஷ்ப ராஜா போட்டிகள் நடைபெற்று குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல் கால்நடை கண்காட்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை வேளாண் துறை இயக்குனர் வசந்தகுமார், சமூக நலத்துறை செயலர், இயக்குனர் ஆகியோர் செய்திருந்தனர்.