/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்காலில் மலர், காய், கனி கண்காட்சி இன்று துவக்கம்
/
காரைக்காலில் மலர், காய், கனி கண்காட்சி இன்று துவக்கம்
காரைக்காலில் மலர், காய், கனி கண்காட்சி இன்று துவக்கம்
காரைக்காலில் மலர், காய், கனி கண்காட்சி இன்று துவக்கம்
ADDED : ஜன 16, 2025 05:57 AM

காரைக்கால்: காரைக்காலில் வேளாண்துறை சார்பில் நடைபெறும் மலர், காய், கனி கண்காட்சியை முதல்வர் இன்று துவக்கி வைக்கிறார்.
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து இன்று 19ம் தேதி வரை காரைக்காலில் கார்னிவல் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி இன்று துவக்கி வைக்கிறார்.
இதன் ஒரு அங்கமாக வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், வேளாண் திருவிழா மற்றும் மலர், காய், கனி கண்காட்சியை முன்னிட்டு தானியம், மலர், காய், கனிகளை கொண்டு ரங்கோலி அலங்காரம், படிமம் தயாரித்தல், வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம், நிறுவனத் தோட்டம், பூந்தொட்டி சேகரிப்பு, மூலிகைச் செடிகள் சேகரிப்பு போன்ற பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது.
இப்போட்டிகளில் அதிக பரிசுகள் பெறுவோருக்கு 'மலர் ராஜா' மற்றும் 'மலர் ராணி' விருதுகள் வழங்கப்படும். விழா புறவழிச்சாலையில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
மேலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர்கள், செடிகள், தென்னங்கன்றுகள் மற்றும் பல்வேறு வகையான மலர்கள், செடிகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.
இதற்காக பிரத்தியக அரங்கம் அமைக்கப்பட்டு மலர்கள் அலங்காரப்பொருட்கள் வைப்பதற்கான பணிகள் கூடுதல் வேளாண்துறை இயக்குநர் கணேசன் தலைமையில் நடந்து வருகிறது. இப்பணிகளை அமைச்சர் திருமுருகன் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.